'மொதல்ல சம்பள பாக்கியைக் கொடுங்க'.. வெளுத்தெடுத்த கிரிக்கெட் வீரரின் மனைவி!
Home > தமிழ் newsசூதாட்ட புகார் தொடர்பான விவகாரத்தில், தனது தரப்பு நியாயத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், ''என் மீதான புகார் காரணமாக நான் தற்கொலைக்கு முயன்று எனது குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டேன்.
வருங்காலத்தில் எனது மகளோ,மகனோ கிரிக்கெட் விளையாடினால் கூட என்னால் மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் பார்க்க முடியாது,'' என மன வருத்தத்துடன் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை கலர்ஸ் தொலைக்காட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தது. ஸ்ரீசாந்தின் விளக்கத்தைப் பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா அவரைக் கிண்டல் செய்திருந்தார்.(2013-ம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் விளையாடிய போது தான் ஸ்ரீசாந்த் மீது சூதாட்ட புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது)
ராஜ் குந்த்ராவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் உங்கள் அணியின் முன்னாள் வீரர்களை மதியுங்கள் எனவும் அறிவுரை வழங்கினர்.
இந்த நிலையில் ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஸ்வரி,''ராஜ் குந்த்ரா என் கணவர் ஸ்ரீசாந்த்துக்கு இன்னும் சம்பளப்பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். இப்போது என் கணவரை கிண்டல் செய்கிறார். அவருக்கு அந்த அளவுக்குத்தான் துணிவு இருக்கிறது. ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது,'' என ராஜ் குந்த்ராவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'இந்த விளையாட்டில் இவ்வளவு வருமானமா'....வெயிட்டாக சம்பளம் வாங்கும் வீரர்கள்!
- 'ஹர்பஜனிடம் இதனால் தான் அறை வாங்கினேன்'.. மனந்திறந்த பிக்பாஸ் போட்டியாளர்!
- 'உங்க தலயோட என்ன சேர்த்து வச்சது இவர்தான்'.. ரகசியத்தை உடைத்த தோனி மனைவி!
- 'மொத்தமாகக் கிளம்பி' சென்னை வந்த ஆப்கான் வீரர்கள்.. என்ன காரணம்?
- ஐபிஎல் 2019: தடை முடிந்தாலும்...'இந்த வீரர்களால்' தங்கள் அணிக்காக விளையாட முடியாதா?
- "ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் உடைந்தது"....முக்கிய வீரர்களை கழற்றிவிட்ட சன் ரைசர்ஸ்!
- 'வெற்றி நிச்சயம் கப் லட்சியம்'.. கோடிகளைக் கொடுத்து வாங்கிய வீரர்களை கழற்றி விட்டது ராஜஸ்தான்!
- 'இந்த தடவ மிஸ் ஆகக்கூடாது'.. ஏகப்பட்ட வீரர்களைக் கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ்!
- 'சிறந்த ஆல்ரவுண்டர் போட்டி' மோதிக்கொண்ட அணிகள் .. ஒரே அக்கப்போரா இருக்கே!
- #ஐபிஎல்2019: என்ன இத்தனை வீரர்களைக் 'கழற்றி விட்டதா' சென்னை சூப்பர் கிங்ஸ்?