'இந்தியாவிற்கு வெற்றி இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா'...பௌலிங்கில் சாதனை படைத்த வீரர்!

Home > தமிழ் news
By |

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. சிட்னியில் நடந்து வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி  5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு, பேட்டிங்குக்கும் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் புதிய மைல்கல் ஒன்றை எட்டினார்.புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார்.இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம்,சர்வதேச ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.மேலும் 96 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய 12-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் புவனேஷ்குமார் பெற்றார்.

CRICKET, BHUVNESHWAR KUMAR, INDIA VS AUSTRALIA, ODI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS