பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் நாடு முழுவது இன்று நடக்கும் என காங்கிரஸால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் ஆதரவு அமோகமாக உள்ள புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இன்று வெகுவாக இயக்கப்படவில்லை; மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் புதுச்சேரிக்கு பதில் விழுப்புரம் வழியாக இயக்கப் படுவதோடு, முழுஅடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றும், சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கம்போல் அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் பெங்களூரு-கர்நாடகாவில் காங்கிரஸின் பேராதரவோடு பாரத் பந்த் வெற்றிகரமாக நிகழ்வதாகத் தெரிகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பேஸ்புக், ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ், லைக்ஸ் பெற வேண்டும்: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!
- இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என்று பேசிய பாஜக எம்.எல்.ஏ-வின் நாக்கை துண்டித்தால் 5 லட்சம் பரிசு!
- ₹5 Lakh Reward For Anyone Who 'Cuts Off BJP Lawmaker's Tongue', Says Congress Leader
- "HIV will spread": Subramanian Swamy on Section 377
- BJP MLAs wear raincoats to protest water leaks at Assembly
- ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.. சோபியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
- "If a girl denies your proposal, come to me. I will kidnap her for you": BJP MLA promises young men
- யார் இந்த சோபியா? பின்னணியும்.. ’பிஜேபி’ விமர்சன வழக்கும்!
- மாணவி சோபியா புலிகளின் ஆதரவாளர்: சுப்ரமணிய சுவாமி!
- Student Who Shouted Anti-BJP Slogan Could Be An 'LTTE Member', Says BJP Leader