நீண்ட நாட்களுக்குப்பின் 'தமிழ் சினிமாவின்' சிறந்த சண்டைக்காட்சிகள்

Home > தமிழ் news
By |

அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதாரி, டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் செக்க சிவந்த வானம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

 

இந்தநிலையில் தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கவுதம் மேனன் செக்க சிவந்த வானம் படம் நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' நீண்ட நாட்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் சிறந்த சண்டைக்காட்சிகளை பார்த்தேன். சிம்பு,அருண் விஜய்,விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி,ஜோதிகா நன்றாக நடித்துள்ளனர். தைரியமான புதிய கேரக்டர்களை மணி சார் அறிமுகம் செய்துள்ளார்,'' என படம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 

 

இன்று காலை நடிகர் மஹத்,கவுதம் மேனன் இருவரும் செக்க சிவந்த வானம் படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடன் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது. 

VIJAYSETHUPATHI, SIMBU, MANIRATNAM, CCV

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS