இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்து வருகிறது.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வருகிறது.
இந்தநிலையில் பிசிசிஐ இந்திய வீரர்களின் லஞ்ச் இதுதான் என மெனு பட்டியல் ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.ஸ்டஃபுடு லாம்ப், ரோஸ்டர்டு ஸ்டோன் பாஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் கார்போனரா பாஸ்தா, கிரில்டு சிக்கன், தால் மக்னி போன்ற உணவுகளுடன் இறால், உருளைக்கிழங்கு, பட்டாணி, சோளம், கேரட், ஆகியவை கலந்த சாலட், மேலும் ஆப்பிள், ராஸ்பெர்ரி, ஆலமண்ட், கொண்ட பழங்கள் சாலட் மற்றும் வெரைட்டி ஐஸ்கிரீம் போன்றவை அந்த மெனுவில் இடம்பெற்றுள்ளன.
இதனைப்பார்த்த நெட்டிசன்கள், இவ்வளவு சாப்பிட்டு விட்டு அவர்களால் எப்படி விளையாட முடியும்? என ட்விட்டரில் தொடர்ந்து இந்திய அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Kohli's send off to England Captain Joe Root stokes controversy
- முதல் டெஸ்ட் போட்டி: புஜாரா,குல்தீப் யாதவ் அவுட்.. அஸ்வின், கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு!
- Pics: MS Dhoni switches back to his old ‘V Hawk’ haircut
- இங்கிலாந்தில் டான்ஸ் ஆடிய 'இந்திய கேப்டன்'.. வீடியோ உள்ளே!
- பிரதமர் மோடிக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் வியந்து பார்க்கப்படுபவர் தோனி: சர்வே
- Insane! Here is how much Virat Kohli earns for one single Instagram post
- 'சிங்கிள்' இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 'விராட்' வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா?
- "Virat Kohli will be desperate to score runs": England vice-captain's shocking remark
- Kamal Haasan, Virat Kohli to be featured on National Geographic
- Most embarrassing thing I've done: Joe Root on bat drop