பொதுவாக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, குறித்த நேரத்தில் ’தம்ப்’ எனப்படும் வருகையை பதிவு செய்யும் மின்னணு சாதனங்களின் ’பஞ்ச்’ என்கிற விருப்பத் தேர்வெல்லாம் கிடையாது.

 

ஆனாலும் பொதுவான அரசு அலுவலக நேரங்கள் காலை 10 முதல் மாலை 6 என்றாலும் அலுவல் பணிகளை முடிப்பதற்கு எந்தவிதமான நேரவரம்பும் கிடையாது. ஆனால் தனியார் அமைப்புகளை போலவே, இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் இளைஞர்கள்தான். ஆக இவர்களின் ’டிரெஸ் கோடு’ என்பது தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

முதல் கட்டமாக இந்தியாவின், திரிபுரா மாநிலம் தனது அரசுக்கு உட்பட்ட அதிகாரிகளுக்கான ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அதன்படி ஜீன்ஸ் பாண்ட்,  கார்கோ பாண்ட், கூலிங் கிளாஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திரிபுரா முதல்வர் கலந்து கொண்ட மிக முக்கியமான கருத்தரங்கம் ஒன்றில் அரசு அதிகாரிகள் பலர் நவீன உடைகளையும்,  கூலிங் கிளாஸையும் அணிந்து வந்திருந்ததையொட்டி இந்த மெமோ பிறப்பிக்கப்பட்டது.


மேலும் அலுவலகங்களில் செல்போன் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டுமென கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களைப் போலவே அரசு அதிகாரிகளுக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்பொழுது அரசு அலுவலகங்கள் தனியாரை விட மிகவும் சீர்மையாக உருப்பெறும் என சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

BY SIVA SANKAR | AUG 28, 2018 1:18 PM #DRESSCODE4GOVTOFFICIALS #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS