கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை சேர்ந்து கேரளாவை நிலைகுலைய வைத்துவிட்டது.கொட்டிய பெருமழையின் பாதிப்பிலிருந்து மீள போராடுகின்றனர் கேரளா மக்கள். பல இடங்களில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
இளைஞர்கள், பொதுமக்கள், ராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள். கேரளாவை மீட்டு கொண்டுவருவதில் பலரும் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவிலை சுத்தம் செய்து பலரையும் நெகிழ்வடைய செய்துள்ளார்கள் முஸ்லீம் இளைஞர்கள்.இவர்கள் வயநாடு அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சிலர் அருகாமையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு கோவிலையும் சுத்தம் செய்ய முடியுமா என தயக்கத்துடனே கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் "நாங்கள் முஸ்லீம்கள் தான். ஆனால் கோவில் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தால் உடனடியாக கோவிலை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்கள்.இதனை அறிந்த கோவில் நிர்வாகமும் கோவிலை சுத்தப்படுத்த அனுமதி அளித்தனர். கோவிலின் கருவறையை தவிர அனைத்து பகுதியையும் முஸ்லீம் இளைஞர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர்.
சாதி மத வேறுபாடுகள் அனைத்தையும் உடைத்து மனிதம் மட்டுமே உன்னதமானது என்பதை நிருபித்து விட்டார்கள் இந்த இளைஞர்கள்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தனது 'ரசிகரின்' பெயரில் ரூ.1 கோடி நிதியளித்த 'தோனி' ஹீரோ!
- 'கடவுளின் தேசம் மீண்டும் உயிர்த்தெழும்'.. வீடியோ வழியாக நம்பிக்கை விதைக்கும் ரம்யா நம்பீசன்!
- இளைஞர்களை உற்சாகப்படுத்த 'ஓ' போட்ட கலெக்டர்..மீட்பு பணியில் கலக்கும் சென்னை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி !
- கேரளாவிற்கு 700 கோடி வாரி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம் !
- தனி ஒருவராக கேரளாக்கு 50 கோடி வழங்கிய வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர் !
- வெள்ளத்தில் மிதந்துவரும் சூடான டீ.. மெல்லத் திரும்பும் கேரள மக்களின் இயல்புநிலை!
- கேரளத்து மீனவர்களே எனது ராணுவம் ..முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் !
- 'தந்தை தனக்காக' சேர்த்து வைத்த நிலத்தை....'தானமாக வழங்கிய' 16 வயது மாணவி!
- 'பணமளித்து வேதனைப்படுத்தாதீர்கள்'.. நெகிழச்செய்த ரியல் ஹீரோக்கள்!
- Captain to the rescue, DMDK to donate relief material worth Rs 1 cr to Kerala