‘நச்சுக் காற்றால் நாடே அவதிப்படும் கொடூரம்’.. தொழிற்சாலை மூடப்படுமா?

Home > தமிழ் news
By |

தாய்லாந்து நாட்டின் தலைநகரம் மற்றும் இன்னும் எஞ்சியுள்ள பகுதிகளிலும், அந்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தளங்களிலும், காற்று மாசுபாடு காரணமாக நடந்துள்ள விபரீதங்கள் இணையத்தில் புகைப்படங்களாக வைரலாகி வருகின்றன.

பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் புழங்கும் அதிகப்படியான வாகனப் போக்குவரத்தும், நகருக்கு அப்பால் இருக்கும் தொழிற்சாலைகளின் ஊடே கிளம்பி வரும் நச்சுத் தன்மை வாய்ந்த காற்றும் அங்கு வாழ்வதற்கான சூழ்நிலையை கெடுத்து மனிதர்களுக்கு பேராபத்தினை விளைவிக்கத் தொடங்கியுள்ளது.இதனை அடுத்து பெட்ரோல், டீசல் பங்குகள் முடக்கப்பட்டன. பள்ளிகளும் மூடப்பட்டன. தொழிற்சாலைகளை மூடச்சொல்லி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலை நச்சுக்காற்று தனது எல்லைக்கான அளவை மீறியதால் 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக மாறி வீசுவதாக அந்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

எனினும் ரத்த இருமல், மூக்கு மற்றும் கண்களில் ரத்தக் கசிவு-ரத்தப் போக்கு உள்ளிட்டவை வரத் தொடங்கியதை அடுத்து அம்மக்கள் அவற்றை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய அரசு முயற்சி எடுத்தும் எவ்வித மாற்றமும் இல்லை என்று பலர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

CHINA, BIZARRE, POLLUTION

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS