ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, 40 ஆயிரம் மருந்து கடைகள் அடைப்பு!

Home > தமிழ் news
By |

தமிழ்நாடு மருந்து விநியோகர் சங்கம் அகில் இந்திய அளவில், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, ஏறக்குறைய நாடு முழுவதும் 40 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டு ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தை நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணிவரை நடத்துகின்றனர். எனினும் முக்கியமான சேவை என்பதால்  மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் மருந்தகங்கள் மட்டும் இயங்கி வருகின்றன.


ஆன்லைனில் மருந்து வாங்கும்பொழுது போலி மருந்துகள், ஒவ்வாமை உண்டாதல், சமூக விரோதிகள் கையில் தடை செய்யப்பட்ட மருந்துகள் கிடைத்துவிடக் கூடிய அபாயம், மருந்துகளில் பிரச்சனை என்றால் திருப்பி அனுப்ப முடியாத பல்வேறு சூழல்கள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் இருக்க வேண்டிய மருந்துகள் எவை என்று பாராமெடிக்கல் பயின்றவர்களுக்கே தெரியும், ஆன்லைனில் டெலிவரி செய்பவர்கள் அவ்வாறு தெரிந்தவர்களா என்பது சந்தேகம்தான்.

 

ஒருவேளை மருந்து கூரியரில் வருகிறது என்றால் அதன் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.  மேலும் மருந்தின் தரம் மற்றும் கட்டுப்பாடுகளை கண்காணிக்க வேண்டிய மருந்து ஆய்வு அதிகாரிகளுக்கு இந்த ஆன்லைன் முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.

MEDICINE, MEDICAL, PHARMACY, AIOCD, EPHAMRMACY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS