Watch Video: 'இப்படியா ரன் அவுட் ஆவுறது'...தொடர்ந்து அசிங்கப்படும் வீரர்!

Home > தமிழ் news
By |
Watch Video: 'இப்படியா ரன் அவுட் ஆவுறது'...தொடர்ந்து அசிங்கப்படும் வீரர்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்,பாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுட் ஆன விதம் ரசிகர்கள் மத்தியில் கடும் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 4 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது நியூசிலாந்து அணி.

 

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுக்கு 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி,மீண்டும் சொதப்பலான முறையில் ரன் அவுட்டானார்.

 

சமீபத்தில் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவு மிகவும் மோசமான முறையில் ரன் அவுட்டான அசார் அலி,அதிலிருந்து பாடம் கற்று கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை தான் செய்கிறார்,என கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் நக்கலடித்து வருகிறார்கள்.

CRICKET, PAKISTAN, AZHAR ALI, RUN-OUT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS