தொழிலதிபர்கள் அரங்கில் சிறப்பு விருந்தினராக பேசும் ஆட்டோ டிரைவர்.. ஏன்?

Home > News Shots > தமிழ் news
By |

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் முன்னிலையில் தொழில் முறை குறித்து உரையாடி, பெரும் வரவேற்பு பெற்று வருகிறார்.

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் பயணிகள் பலரும் விரும்பி பயணிக்கும் ஷேர் ஆட்டோ அண்ணாதுரையின் ஷேர் ஆட்டோதான். ஏனென்றால் பயணிகள் தங்கள் பயணத்தை பயனுள்ள வகையில் அனுபவிக்க இந்த ஆட்டோவில் எக்கச்சக்க சமாச்சாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக படிக்க விரும்பும் பயணிகளுக்கு நியூஸ்பேப்பர், வார, மாத இதழ்கள் ஆட்டோ முழுக்க நிரம்பியுள்ளன. மேலும் இணையத்தில் ஊர்ந்தபடியே ஆட்டோவில் பயணம் செய்யவிரும்பும் பயணிகளுக்காக வை-ஃபை இணையதள வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன் பணப்பரிவர்த்தனைக்கான எலக்ட்ரானிக் ஸ்வைப்பிங் வசதியும், அன்னையர் தினம் மற்றும் குழந்தைகள் தினத்தன்று வாசகர்களுக்கு டிஸ்கவுண்டும் உண்டு. இப்படி வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றியபடி அண்ணாதுரையின் ஆட்டோ பயணித்து வருகிறது. இந்த தொழில் யுக்திதான் அண்ணாதுரையினை பல இந்திய பிஸ்னஸ்மேன்கள் பங்குபெரும் நிகழ்ச்சிகளில் மைக் பிடித்து பேசும் வாய்ப்பினை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து பல கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு உரையாடி வருகிறார் அண்ணாதுரை. இந்த நிலையில் மொஹாலியில் ‘ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ்’ அமைப்பினர் நடத்தவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். தனது பிஸ்னஸ் யுக்தியால் வாடிக்கையாளர்களையும், பேச்சாற்றலால் பிஸ்னஸ்மேன்களையும் கவர்ந்திழுத்த ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை 12-ஆம் வகுப்பு டிராப் அவுட் ஆனவர் குறிப்பிடத்தக்கது.

AUTODRIVER, MOTIVATIONAL, INSPIRATION

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES