'தாண்டிச்சென்ற பந்தை அந்தரத்தில் தாவிப்பிடித்த வீரர்'.. சூப்பர்மேனாகக் கொண்டாடும் ரசிகர்கள்!
Home > தமிழ் newsதன்னை தாண்டிச்சென்ற பந்தை அந்தரத்தில் தாவிப்பிடித்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாமை, ரசிகர்களை சமூக வலைதளங்களில் வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர்.
துபாயில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 482 ரன்களும், ஆஸ்திரேலியா 202 ரங்களும் எடுத்திருந்தன.
நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு,182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.தொடர்ந்து தனது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 135.9 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து, டெஸ்ட் போட்டியை டிரா செய்தது.
இதில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது அந்த அணியின் வீரர் மிட்செல் ஸ்டார்க் அடித்த பந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை தாண்டிச்சென்றது. பந்து தாண்டிச்செல்வதைக் கவனித்த பாபர் சற்றும் யோசிக்காமல் சட்டென்று ஜம்ப் செய்து வலது கையால் அந்த பந்தை அருமையாக 'கேட்ச்' செய்தார்.இதனால் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பாபரின் இந்த கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களால் வெகுவாக புகழப்பட்டு வருகிறது. ரசிகர்கள் சூப்பர்மேன் என அவரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 16-ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Watch Video: 'பிரித்வி ஷாவை விட்டு விடுங்கள்'.. கேப்டன் விராட் கோலி காட்டம்!
- 'நல்லா தான் வெளையாடுறாரு'.. ஆனா அதிர்ஷ்டம் இல்லையே!
- '37 வயதா? இல்லை 47 வயதா? என்பது முக்கியமில்லை'.. கம்பீர் ஆவேசம்!
- '10 ஓவர்களில் 9 ரன், 8 விக்கெட்'.. டி20 போட்டியில் இப்படியும் ஒரு சாதனை!
- Anil Kumble Wins Hearts With A Warm Response To A Fan On The Same Flight
- 'இங்கிலாந்து டெஸ்ட்டுல' இந்த நக்கல் இல்லையே ப்ரோ.. வறுத்தெடுத்த பிரபலம்!
- "நான் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன்"...விபத்துக்குப் பின் மாத்யூ ஹெய்டனின் உருக்கமான பதிவு!
- Jonty Rhodes Spots 'The Map Of Tamil Nadu' On Matthew Hayden's Head Injury
- Wow! Skipper Virat Kohli turns vegan
- வெளிப்படையாகப் பேசிய முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை?