Watch Video: 'ரசிகர்களை நெகிழவைத்த ஆஸ்திரேலியா'...சர்ப்ரைஸான இந்திய வீரர்கள்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய அணியின் கௌரவ துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட 7 வயது சிறுவன்  ஆர்ச்சி ஷில்லர்,போட்டி முடிந்ததும் மைதானத்தில் வந்து வீரர்களுக்கு கைகொடுத்த நிகழ்வு,கிரிக்கெட் ரசிகர்களை நெகிழச் செய்தது.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடைபெற்றது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆர்ச்சி ஷில்லர் என்ற 7 வயது சிறுவன் கௌரவ துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.மிக அபூர்வமான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஷில்லர்க்கு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே பெரும் கனவாகவும்.ஆனால் மருத்துவர்கள் ஷில்லர்க்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் எனவும் அவரின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என தெரிவித்து விட்டார்கள்.

 

இதனால் சோகத்தின் பிடியில் இருந்த ஷில்லரின் பெற்றோர்,சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டார்கள்.இதன் பலனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக மெல்போர்னில்  நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஷில்லரை கௌரவ துணை கேப்டனாக நியமித்தது.

 

இந்நிலையில் போட்டி முடிந்ததும் வீரர்களுக்கு கைகொடுக்கும் நிகழ்விற்காக மைதானத்திற்கு வந்த ஆர்ச்சி ஷில்லர் இந்திய வீரர்களுக்கு கைகொடுத்தார்.இந்திய வீரர்கள் ஆர்ச்சி ஷில்லரை தட்டி கொடுத்தார்கள்.இந்த நிகழ்வினை கண்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள்.அதோடு ஆஸ்திரேலிய அணியின் செயலை ரசிகர்கள் மிகவும் பாராட்டினார்கள்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

CRICKET, ARCHIE SCHILLER, MELBOURNE CRICKET, INDIAN CRICKETERS, MELBOURNE TEST

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS