''பவுலிங் போடும் போது ரத்த வாந்தி''...விரக்தியில் ஓய்வை அறிவித்த பிரபல வீரர்!

Home > தமிழ் news
By |

நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என மருத்துவர்கள் உத்திரவாதம் அளிக்காததால்,கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ்.

 

பவுலிங் போடும்போது ஹேஸ்டிங்ஸிற்கு  நுரையீரலில் ரத்தக் கசிவு பிரச்சினை இருந்தது, இதனால் இவர் ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினார்.  இது எப்போதும் இல்லையென்றாலும், மீண்டும் பவுலிங் போடும்போது மைதானத்திலேயே ஏதாவது நடந்து விடுமோ என்ற பயத்தினால் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

 

தான் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே ஏ.பி.டிவில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜான் ஹேஸ்டிங்ஸ்.ஆனால் இவர் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.29 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 271 ரன்களோடு ஒரு அரை சதத்தையும் எடுத்துள்ளார். 9 சர்வதேச டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜான் ஹேஸ்டிங்ஸ், 'நான் விளையாடும்போது மீண்டும் ரத்தக் கசிவு ஏற்படாது என்பதற்கு மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. இது எனக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.மேலும் ஓய்வு முடிவு என்பது மிகவும் கடுமையான ஒன்றாகும்.அதன் கடுமையான சூழலிலிருந்து நான் வெளிவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

CRICKET, JOHN HASTING, MYSTERY LUNG PROBLEM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS