முகத்தை அடையாளத்துக்காக காட்டி( Face Recognition) நம்மை நாம் என்று உறுதி செய்யும் பாதுகாப்புத் தொழில்நுட்ப வசதி எப்போதோ வந்துவிட்டது. ஆதார் போன்ற இந்தியாவின் தனிநபர் அடையாள அட்டை, பர்சனல் கம்ப்யூட்டர்கள், சில சமூக வலைதள கணக்குகள் உள்ளிட்ட பல இடங்களில் நாம் முகத்தையோ, கண்களையோ (கண்ணின் கருவிழி) காட்டும் வசதிகள் உள்ளன. அப்போது அந்த மென்பொருள் அமைப்பு நம்மை முழுமையாக ஸ்கேன் செய்து, குறிப்பிட்ட நபர் நாம்தான் என உறுதி செய்துவிடும்.  அரசு பாதுகாப்பு, ஆவணங்கள், தனிநபர் அடையாளங்கள் உள்ளிட்ட விஷயங்களுக்கு மட்டுமே இத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

ஆனால் சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் வருகையையும் கூட, மேற்கண்ட Face Recognition என்கிற, ‘முகத்தை அடையாளம் காட்டும்’ தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். இதற்கென சிறிய கேட்ஜெட் போன்ற கருவியை பயன்படுத்துகின்றனர். டேப்லெட் போன்ற கேட்ஜெட்டுகளுக்கு நேராக மாணவர்களை நிற்கச் சொல்லி, முகத்தை அடையாளம் காட்டி தத்தம் வருகையைப் பதிவு செய்கின்றனர்.

 

மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள், பார்வையாளர்கள் என ஒவ்வொருவரையும்  இவ்வாறாக ஸ்கேன் செய்து அவர்களை அவர்களின் விபரங்களை மாபெரும் தகவல்- தரவுகளாக (DataBase) பதிவு செய்துகொண்டு ஒவ்வொருவரின் நீண்ட நாள் நடப்புகளைக் கண்காணிக்கின்றனர். மாணவர்களைத் தொடந்து அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இந்த முறை வரவிருப்பதாகவும் சீன அரசின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

BY SIVA SANKAR | AUG 6, 2018 12:29 PM #CHINA #FACERECOGNITION #UNIVERSITY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS