சென்னை விருகம்பாக்கத்தில் இருந்தது சேலம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி உணவகம். கடந்த மாதம் 29-ம் தேதி இரவில் அந்த கடைக்கு திமுக உறுப்பினர் யுவராஜ் உட்பட மூன்று பேர் சென்று பிரியாணி கேட்டனர். அதற்கு ஊழியர்கள் பிரியாணி தீர்ந்துவிட்டதாகச் சொல்ல, ‘தீர்ந்த பிறகும் எதற்காக கடையைத் திறந்து வைத்திருக்கீங்க’ என்று அதிரடியாக ‘பாக்ஸிங்’கில் இறங்கு பஞ்ச் பண்ணி பஞ்சாயத்து ஆக்கிவிட்டார். திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் அதன் பிறகு அந்த ஹோட்டலுக்குச் சென்று ஊழியர்களைப் பார்த்து வருத்தம் தெரிவித்ததோடு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அடிப்படை பொறுப்புகளில் இருந்து பணிநீக்கம் செய்தார்.

 

இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் உணவக மேலாளர் புகார் அளித்ததன் பேரில் ‘பிரியாணி தாக்குதலில்’ ஈடுபட்ட ராம்கிஷோர், கிஷோர், கார்த்திக், சுரேஷ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளிகளாக யுவாராஜூம் திவாகரும் தேடப்பட்டனர். இந்நிலையில் இருவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளர். அவர்களை 24ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

BY SIVA SANKAR | AUG 21, 2018 3:01 PM #BRIYANI #DMK #MKSTALIN #RRANBUBRIYANICASE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS