முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை மிகுந்த அளவில் மோசமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவருகிறார். இந்தநிலையில், அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

 

இந்தநிலையில், பிரதமர் மோடி நேற்று  மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். முன்னதாக கடந்த 12ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோர் வாஜ்பாயை  நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

BY JENO | AUG 16, 2018 10:27 AM #BJP #ATAL BIHARI VAJPAYEE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS