இருக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன்!

Home > தமிழ் news
By |

இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

 

இந்தநிலையில் தமிழகத்தில் மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது:-

 

''புல் எஃபெக்ட் காரணமாகத் தமிழகத்தின் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கேரளாவின் சில பகுதிகளுக்கு அடுத்த இரு நாட்களுக்கு மழை இருக்கும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், திண்டிவனம், திருச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்காவது மழை இருக்கும். 23-ம் தேதியில் இருந்து வடமாவட்டங்களில் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.

 

சென்னையைப் பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 350 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்னும் இயல்பு மழை அளவான 850 மி.மீ. எட்டுவதற்கு இன்னும் 500 மி.மீ. மழை பெய்ய வேண்டும்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS