இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவிருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே செப்டம்பர் 15 அன்று துபாயில் நடைபெறவிருக்கிறது.


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த தொடரில் பங்கேற்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஓமன், நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய ஐந்து நாடுகளில் ஒன்றும் தகுதிபெற்று உள்நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குழு பி-இல் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு ஏ-வில் ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடம்பெற்றிருக்கும் நிலையில் மேற்கண்ட ஐந்து நாடுகளில் தகுதிபெறும் ஒரு நாடும் இடம்பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.


அந்த சுற்றில் தகுதி பெறும் இரணடு அணிகளும்  துபாயில் செப்டம்பர் 28 அன்று இறுதிப் போட்டியில் சந்திக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா செப்டம்பர் 19 அன்று தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக செப்டம்பர் 18 அன்று நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி குழு ஏ-விற்கு தகுதி பெறும் அணியுடன் மோதுகிறது.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 25, 2018 8:58 AM #ASIACUP2018 #ASIACUPSCHEDULE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS