வீட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவி.. நாட்டுக்காக உயிரிழந்த குமரி ராணுவவீரர்!

Home > தமிழ் news
By |

ராணுவ வீரர்கள் தேசத்துக்கு அரண். குடும்பம், பிள்ளைகள், ஸ்மார்ட்போன்,  பொழுதுபோக்கு என இயல்பு வாழ்க்கையை துறந்து பேண்ட்-ஷர்ட்-ஷூ-தொப்பி-துப்பாக்கியுடன் எல்லையில் நிற்கும் துறவிகள் அவர்கள்.

 

இந்திய எல்லையில் இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, பரிதாபமாக பலியான ராணுவ வீரர் ஜெகனின் உடல் டெல்லி விமானம் மூலம் இரவு 7 மணி அளவில் திருவனந்தபுரம் வந்தடைந்து, நாளை காலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள அவரது உறவினர்களுடன் ஒப்படைக்கப்படவிருக்கிறது.


குமரி அருகே உள்ள கோழிப்போர்விளை எனும் ஊரை சேர்ந்த 39 வயது ஜெகன் தந்தையை இழந்து 16 வருடத்துக்கு முன் பணியில் சேர்ந்த ஜெகனின் மனைவி சுபி, தற்போது 7 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கும்பொழுது, காஷ்மீர் எல்லைப்பகுதியில் சென்ற 8-ம் தேதி தீவிரவாதிகளுடனான் துப்பாக்கிச் சூட்டில், உடலில் குண்டுபாய பரிதாபமாக உயிரிழந்தார்.


தொடக்கத்தில் 15 ஆண்டுகள் பணிபுரிவதாக ராணுவத்தில் இணைந்தவர், பின்னர் தனது குடும்பத்தில் இருந்த வறுமை, சகோதரிகளுக்குத் திருமணம் என்பன போன்ற தேவைகளால் தன் பணியை நீட்டிக்கக் கோரி எழுதிக் கொடுத்தவர். உண்மையில் பணிக்காலம் நீட்டப்ப்பட்ட பிறகே இவ்வாறு அவரை அவரது குடும்பத்தினர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

JAGAN, ARMY, TAMILNADU, INDIA, BSF, ARMEDFORCES, JAWAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS