டிடிவி தினகரனின் அணியில் இருப்பவர் தங்க தமிழ்ச்செல்வன். டிடிவிதினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் குக்கர் சின்னத்தில் தேர்தலில் நிற்பதாக அறிவித்துள்ளார். அதே சமயத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிரான விமர்சனங்களையும் அதிமுக அமைச்சர்கள் கூறிவந்தனர்.

 

அவற்றிற்கு பதில் அளிக்கும் வகையில்,  புதுக்கோட்டையில் அளித்த பேட்டி ஒன்றில்  அதிமுக அமைச்சர் இறந்ததால் உண்டான திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களில், ’அதிமுக வெற்றிபெற்றால் நாங்கள் இணைய தயார்... ஆனால் அதே தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இணைய தயாரா?’ என்று அதிமுகவை பார்த்து நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

BY SIVA SANKAR | SEP 8, 2018 5:40 PM #TTVDHINAKARAN #AIADMK #AMMK #THANGATHAMIZHSELVAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS