ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சாதனையை ஆப்பிள் நிறுவனம் எட்டியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு '2.9%' அதிகரித்துள்ளது. அதாவது 207.39 டாலர்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது. 

 

கடந்த சில வருடங்களாகவே 'ஆப்பிள்' மற்றும்  'அமேசான்' நிறுவனங்களுக்கிடையே யார் முதலில் ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டுவது, என்ற கடுமையான போட்டி நிலவிவந்தது.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்ட முதல் அமெரிக்க நிறுவனம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

 

கணினி அறிமுகமான காலத்திலிருந்தே தனது தனித்துவமான தொழில்நுட்பத்தால்  அதெற்கென ஒரு வாடிக்கையாளர்களை உருவாக்கி கொண்டது ஆப்பிள் நிறுவனம்.காலம் மாற மாற புதிய புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின .அதற்கு ஏற்ப ஆப்பிள் நிறுவனமும் தன்னை மாற்றிக்கொண்டது.

 

ஆப்பிள் ஐபோன், ஐமேக் கணினி, ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி என ஆப்பிள் நிறுவனத்தின் புது படைப்புகள் அனைத்தும் புதுமை கலந்ததாகவே இருக்கும். அது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

 

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன்கள் ஆப்பிளின் சந்தை மதிப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு  சென்றது .  ஆப்பிள் ஐபோன் உபயோகிப்பது சமூகத்தில் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாகவே மாறிப்போனது.

 

வாடிக்கையாளர்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும்  மனதில் வைத்துக்கொண்டு, புதிய பரிமாணத்தில் தன்னை வடிவமைத்துக்கொண்டே இருக்கும்  ஆப்பிளின் இந்த சாதனை உண்மையில் பாராட்டுக்குரியதே !

BY JENO | AUG 3, 2018 1:21 PM #APPLE #IPHONE #1TRILLION #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS