Watch Video: '6 பாலுக்கு 6 சிக்ஸ்' நாங்களும் அடிப்போம்.. இளம் வீரர் அசத்தல்!

Home > தமிழ் news
By |

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த 6-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை, ஆப்கானிஸ்தான் இளம் வீரர் ஹஸ்ரத்துலா சசாய்க்கு கிடைத்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துலா நேற்று சார்ஜாவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பல்கி லெஜண்ட் அணிக்கு எதிராக களமிறங்கினார்.

 

இதில் போட்டியின் 4-வது ஓவரை அப்துல்லா மஜாரி வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட ஹஸ்ரத்துலா 6பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார். 12 பந்துகளில் அரைசதம் அடித்த ஹஸ்ரத் 17 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

 

இதன் மூலம் இந்த 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (வெஸ்ட்இண்டீஸ்), ரவிசாஸ்திரி (இந்தியா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), யுவராஜ்சிங் (இந்தியா), ஜோர்டன் கிளார்க் (இங்கிலாந்து) ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

 

எனினும் ஹஸ்ரத் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

CRICKET, YUVRAJSINGH, HAZRATHULLAHZAZAI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS