திருப்பூர், தேனி கணவர்களைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இன்னொரு கணவரும் தன் மனைவிக்கு வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ள தகவல் பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக திருப்பூர் கார்த்திகேயன் வீட்டுமுறை பிரசவத்தை முயற்சித்ததால் அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது. ஆனால் தொடர்ந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வீட்டிலேயே தன் மனைவிக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்ததனால் பிரச்சனையை சந்தித்தார். இதே சமயத்தில்தான் பிரசவத்துக்கு பயிற்சி முகாம் நடத்தவிருந்த ஹீலர் பாஸ்கர் கோவையில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்களின் அறிவுறுத்தலின் பேரில், அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் துறை பயிற்சி பெற்றவர்களே சுகப்பிரசவம் செய்ய தகுதியானவர்கள் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது தாஜூதீன் தன் மனைவி அன்சாலி பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். வெற்றிகரமாக நிகழ்ந்த இந்த பிரசவத்தில் இத்தம்பதியருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.
ஆனால் அருகில் இருக்கும் வீட்டார் இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் அளிக்க, உடனே அங்கு விரைந்த மாவட்ட சுகாதார இணைஇயக்குநர் ராம் கணேஷ் தலைமையினான குழுவினர் அன்சாலி பாத்திமாவை பரிசோதித்து, பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இதற்கு அன்சாலி பாத்திமாவும், அவரது கணவரும் மறுத்ததை அடுத்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினரின் நீண்ட உரைக்கு பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தேனி கண்ணனுக்கு பிறகு வீட்டில் வைத்து வெற்றிகரமாக பிரசவம் பார்த்ததை அடுத்து, பாதுகாப்பற்ற சூழலில் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்ப்பது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- திருவாரூரில் குழாய் மூலம் கொண்டுசெல்லப்படும் பெட்ரோல்.. விளைநிலங்களுக்கு பாதிப்பா..? இந்தியன் ஆயில் விளக்கம்!
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் 'விடுதலை' செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது!
- மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி ரத்து.. தமிழக அரசின் முடிவை ஆதரித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டாரா அவரது தந்தை..? பதவி விலக கோரும் எதிர்க்கட்சிகள்!
- சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்!
- தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
- தமிழ்நாடு கனமழை.. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
- சென்னை விமானநிலையம்.. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பணியில் அமர்ந்த ரோபோக்கள்!
- ’கட்டையால் அடித்து’ சிறுத்தையை விரட்டிய தமிழச்சிக்கு ’கல்பனா சாவ்லா’ விருது!
- திருப்பூரைத் தொடர்ந்து தேனியில் 'பிரசவம்' பார்த்த கணவர்... தொடர் சர்ச்சை!