அண்ணா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளே தமிழகத்தில் ஆட்டோனமஸ் எனப்படும் தனியார் கழகங்களுக்கு நிகராக இருக்கும் ஒரே அரசு சார்ந்த ஸ்தாபனமாக பார்க்கப்படுகிறது. இவற்றுள் பலதரப்பட்ட இளங்களை மற்றும் முதுகலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் இருக்கின்றன.

 

இங்கு இயங்கும் மண்டல பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக முதுகலை படிப்புகளுக்கான வகுப்புகளும் நிகழ்ந்து வந்தன. இளங்கலை படிப்புகளுக்கான வகுப்புகளை விடவுன் முதுகலை படிப்புகளில் பகுதி நேர படிப்புகளுக்கான விருப்பத் தேர்வுகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் ஏற்கனவே நடைமுறையில் இருந்தன.

 

வேலைக்குச் செல்பவர்கள்,  கற்ப கால பெண்கள் ஆகியோருக்கு பயனுள்ள வகையில் நடத்தப்பட்டு வந்த பகுதிநேர முதுகலை படிப்புகள் சென்ற கல்வி ஆண்டு வரை சிறப்பாகவே நடைபெற்று வந்தன. இந்நிலையில் பகுதி நேரமாக நடைபெற்று வந்து முதுகலை படிப்புகளுக்கான வகுப்புகள் இனி வரும் நடப்பு கல்வி ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார்.

BY SIVA SANKAR | AUG 29, 2018 3:09 PM #COLLEGESTUDENT #STUDENTS #ANNAUNIVERSITY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS