முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது 93 வயதில் நேற்றைய தினம் மறைந்தார். இதனை அனுசரிக்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் இந்த மறைவையடுத்து, இன்று (ஆகஸ்டு 17, 2018) நடக்கவிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகளும் இந்த பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் நிகழவிருந்த தேர்வுகளும் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY SIVA SANKAR | AUG 17, 2018 11:23 AM #EXAM #ATALBIHARIVAJPAYEE #ANNAUNIVERSITYEXAMS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS