விக்ரம் மகன் துருவ் சென்ற கார் மோதி மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்ததாகவும், இந்த விபத்தில் டிரைவர் ஒருவர் காயமடைந்ததாகவும்  இன்று காலை செய்திகள் வெளியாகின.

 

இந்தநிலையில் இதுகுறித்து விக்ரம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், "நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு இன்று அதிகாலையில்  வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும்,ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

 

விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்'', என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY MANJULA | AUG 12, 2018 3:34 PM #ACCIDENT #DHRUV #VIKRAM #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS