அஷோக் நகர் பிரச்சாரத்தில் சரிந்து விழுந்த அமித் ஷா.. பின்னணி என்ன?

Home > தமிழ் news
By |

பாஜக தலைவர் அமித் ஷா, பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிவிட்டு மேடையில் இருந்து இறங்கிச் செல்லும்போது சரிந்து விழுந்துள்ள சம்பவம் இணையதளங்களில் வீடியோக்களாக வலம் வருகின்றன. 

 

மத்திய பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், பாஜக-வேட்பாளருக்காக அப்பகுதிக்குட்பட்ட அஷோக் நகரில்  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அமித் ஷா. பிரச்சார உரையாற்றி முடித்த பிறகு இடது கையால், மேடையின் அங்கத்தையும், வலது கையால் இன்னொரு நபரையும் பிடித்தபடி, மேடையில் இருந்து கீழிறங்கியபடி படியினில் கால்வைக்க படிக்கட்டுகள் சற்றே ஆழமாக இருந்ததாலும், மேலும் அதன் விளிம்பில் அமித் ஷா கால் வைத்ததாலும், யாரும் எதிர்பாராத விதமாக அமித் ஷா தட்டென சரிந்துவிழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

பாதுகாப்பு படை வீரர்கள் பதைபதைத்துப் போய் திணறினர். அதன் பின், அருகில் இருந்தவர்கள் தூக்கிவிடவும், அமித் ஷா உடனடியாக எழுந்தார்.  54 வயதான அமித் ஷா தனது இந்த பிரச்சார உரையின் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக-வின் ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கான நம்பிக்கையை துளிர்க்கச் செய்திருக்காறா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

BJP, AMIT SHAH, VIDEO, VIRAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS