‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச அம்பட்டி ராயுடுவுக்கு தடை’.. ஐசிசி அறிவிப்பு!

Home > தமிழ் news
By |

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடுவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கும் - ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. அப்போது ஜனவரி 12-ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பகுதிநேர பந்துவீச்சாளர் அம்பட்டி ராயுடு பந்து வீசிய 2 ஓவர்களில் மொத்தம் 13 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்தது.

ஆனால் அவர் விக்கெட் ஏதும் கொடுக்கவில்லை. இதனால்  ஐசிசியின் விதிகளுக்கு பொருந்தாத, தன்மையுடன் இருந்த அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சினை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போட்டி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்ற ஐசிசி 14 நாட்களுக்குள் அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுவரை அவர் போட்டிகளில் விளையாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் கெடு கொடுக்கப்பட்ட இந்த 14 நாட்களுக்கு இடையில் தனது பந்துவீச்சினை அம்பட்டி ராயுடு சோதனைக்குட்படுத்தாமல் இருந்ததாலும், நிரூபிக்கத் தவறியதாலும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துமுள்ளது.

ICC, AMBATIRAYUDU, INDVNZ

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS