'பெற்ற தாய் இறந்தபோதும்' மனம் தளராமல் மேட்சை முடித்து கொடுத்த வீரர்..கண்கலங்கிய ரசிகர்கள்!
Home > தமிழ் newsதாய் இறந்த செய்தி அறிந்தும் நாட்டிற்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரின் செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக இங்கிலாந்திற்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் ஆண்டிகுவா என்னும் இடத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 187 ரன்களுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 306 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 -வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டியின் 3 -வது நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பின் தாய் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனம் தளராமல், நாட்டிற்காக 4 -வது நாள் ஆட்டத்தில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை ஜோசப் வீழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘இரவில் பிறந்த நாள் விழா.. காலையில் தனக்குத்தானே போலீஸ் கொடுத்த தண்டனை!
- 'அம்மாவுக்கு இப்படியும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்..ஏனென்றால்?'.. வைரலாகும் மகனின் செயல்!
- ‘77 ரன்களில்’ ஆல் அவுட்..அதிகபட்ச ரன் 17-தான்.. சொந்த மண்ணில் வெச்சு செஞ்ச வெஸ்ட் இண்டீஸ்!
- மூட்டைப்பூச்சியால் பறிபோனதா டெஸ்ட் மேட்ச் வாய்ப்பு..? அணியில் இடம் பெறாத வீரர்!
- ‘திருமணமான மகன் செய்த காரியம்’.. உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற அம்மா!
- சர்வதேச அங்கீகாரம் தந்து ‘பேபிசிட்டர்’ ரிஷப் பண்ட்டினை கவிரவித்த ஐசிசி!
- உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்!
- சாதி கொடுமையால் தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து 5 கி.மீ தள்ளிச்சென்ற மகன்!
- கள்ளக்காதலை தட்டிக் கேட்ட தாய்க்கு மகள் கொடுத்த பரபரப்பு தண்டனை!
- ‘அம்மாவும் இதை நம்புனாங்க’.. தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த மகன்!