பலி எண்ணிக்கை உயர்வு: ராணுவ வீரர்கள் இழப்புக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

Home > News Shots > தமிழ் news
By |

இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்து, இந்திய ராணுவத்தை தாக்கியதாக ஜைஸ்-இ-முகமது  அமைப்பு கருத்து வெளியிட்டிருந்தது. இந்த அமைப்புக்கு எதிராக தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

54 பேர் கொண்ட இந்திய ராணுவ பாதுகாப்பு படையினர் ஜம்மு- காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகர் வரை இரண்டு பேருந்துகளில் பயணம் செய்தபடி ஹைவேயில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத நேரத்தில்  350 கிலோ வெடிமருந்துடன் பயங்கரவாதி ஒருவர் ஓட்டி வந்த கார், இரண்டு ராணுவ பேருந்துகளையும் கோரமாக தாக்கியுள்ளது. இதனால் பேருந்து நிலை தடுமாறி, சம்பவ இடத்திலேயே 18 பேர் இறந்துள்ளனர். மேலும் மீதமுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜைஸ்-இ-முகமது என்கிற அந்த பயங்கரவாத அமைப்பு இந்த கடும் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. இதற்கு அவர்களிடம் காரணம் கேட்டபோது, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் விசாரணையில் கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இணைந்த அடில் அகமது தலைமையில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரியவந்தது. இதனையடுத்து இந்திய ராணுவம் எதிர்த் தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 40லிருந்து 42க்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், பல்வேறு அரசியல் தலைவர்களும், வீரேந்திர சேவாக், விவிஎஸ் லக்‌ஷ்மன், முகமது கைப், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, விஜேந்தர் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

CRPF, PULWAMA, TERRORIST ATTACK, BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES