புல்வாமா தாக்குதல்: 'இந்த நடிகர்கள் யாரும் இந்திய படத்துல நடிக்க முடியாது'...அதிரடி தடை!

Home > தமிழ் news
By |

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அனைவரும் இந்தியத் திரைப்படங்களில் நடிக்கத் தடை விதித்திருப்பதாக  அனைத்து இந்திய திரை தொழிலாளர்கள் அமைப்பு(ஏஐசிடபிள்யுஏ) அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய கோழைத்தனமாக தற்கொலைபடைத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தார்கள்.இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.பல்வேறு உலக நாடுகளும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க படும் என ராணுவம் அதிரடியாக அறிவித்தது.அதோடு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அனைத்து இந்திய திரை தொழிலாளர்கள் கூட்டமைப்பு, இந்தியாவில் எந்தவிதமான திரைப்படத்திலும் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள், கலைஞர்களை பயன்படுத்த கூடாது என அதிரடியாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் ''ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் நமது வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை அனைத்து இந்திய திரைத் தொழிலார்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். மனிதநேயமற்ற இந்த தாக்குதலுக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக நாங்கள் எப்போதும் நிற்போம்.

இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த நடிகரும், நடிகையும் பணியாற்ற தடை விதிக்கிறோம். ஒருவேளை எந்த அமைப்பாவது பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களை பணியமர்த்தினால், அவர்கள் மீது தடைவிதிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்துக்காக துணை நிற்போம்'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PULWAMAATTACK, PAKISTAN, CRPFJAWANS, ALL INDIA CINE WORKERS ASSOCIATION, PAKISTANI ACTORS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS