மிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்.. சந்திகக் தயார்!

Home > தமிழ் news
By |

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின், மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் நேரடி போர் தொடங்கியது என்றே சொல்லலாம். காரணம், கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் விஷயத்தில் நிகழ்ந்த இழுபறி. எனினும் அதன் பிறகு தமிழக முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் மு.க.ஸ்டாலினின் பெயர் பதிவிட்டிருந்தார். ஆனால் அதுவும் கண் துடைப்புதான் என்று மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார்.

 

தொடர்ந்து மு.க.ஸ்டாலின், திருமுருகன் காந்தி மற்றும் நக்கீரன் உள்ளிட்ட பலரது கைது விஷயங்களில் கூட தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். இந்நிலையில் அதிமுக அரசு மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்று மோடி மற்றும் தமிழக அரசை நேரடியாக விமர்சித்து பேசிய பேச்சுக்கு வழக்கு தொடர்ந்தது. 


இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய உறவினர் ஒருவருக்கு உருவாக்கிக் கொடுத்த கட்டுமான காண்ட்ராக்டில் 3 கோடிக்கும் மேல் ஊழல் நடந்ததாக மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இதற்கு பதிலுக்கு நாங்களும் வழக்கு தொடர்வோம் என உளுந்தூர்பேட்டையில் முதல்வர் பேட்டி அளித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘மிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள். அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் என்றும் டெண்டர் புகாரில் நாங்கள் தொடுத்த வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டியது தானே’ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS