‘அப்படியெல்லாம் திறக்கக் கூடாது’.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ‘செக்’!
Home > தமிழ் newsஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரண்டாவது முறையாக அனுமதி தர மறுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.
இதனையடுத்து ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவிப்பதாக, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராத தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மின்விநியோகம் வழங்குவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரண்டாவது முறையாக மீண்டும் மறுப்பு தெரிவித்ததோடு, ஆலையையை திறக்க வேண்டுமென்றால் பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘ரூ.3 லட்சம் கோடி முதலீடு; 10 லட்சம் வேலை வாய்ப்பு’.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்!
- கைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்!
- ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடி மின் இணைப்பு’ வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- போராட்ட எதிரொலி: ‘வகுப்பறைகளை திறந்து வைத்து பாடம் நடத்தும் இளைஞர்கள்!’
- ‘சசிகலாவின் பேட்டி ஒரு ‘செட்-அப்’ என்றார்கள்.. உண்மையில் நடந்தது இதுதான்’.. செய்தியாளர் குணசேகரன்!
- குடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்!
- ‘கரூரை தாண்டி கூட போனதில்ல’.. ஸ்வீடன் செல்லும் அரசுப்பள்ளி மாணவன் நெகிழ்ச்சி!
- என்ஜின் இடுக்கில் ஆள் சிக்கியது தெரியாமல் வெகுதூரம் வந்த ரயில்.. நெல்லையில் பரபரப்பு!
- 'பொங்கல் பரிசு ஆயிரம் எங்கே?'.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிப்போட்ட கணவர்!
- வீடியோ கால் மூலம் சிக்கிய விநோத செல்போன் திருடன்.. பரபரப்பு சம்பவம்!