கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழை கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது.வெள்ளத்தால் 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

 

பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்துள்ளன. இதுதவிர, கன மழைக்கு அம்மாநிலத்தில் 476 பேர் பலியாகியுள்ளனர்.இதிலிருந்து மீள்வது கேரளாவிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.பல மாநில அரசுகள்,பல அமைப்புகள் என பலதரப்பில் இருந்தும் உதவிகள் வந்தவண்ணம் உள்ளது.

 

இந்நிலையில் வெள்ள பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த பாதிப்பாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒருவர் எலி காய்ச்சல் பாதிப்பால் இறந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது.நிவாரண முகாம்களில் கிட்டத்தட்ட 9 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் தற்போது தங்களின் வீடுகளுக்கு திரும்ப தொடக்கி இருக்கிறார்கள்.

 

இந்நிலையில் கோட்டயம் மாவட்டம் கடநாடு பகுதியைச் சேர்ந்த பி.வி. ஜார்ஜ் (வயது 62) என்பவர் எலிக் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக கடும் காய்ச்சல் இருந்தநிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது உடல் உறுப்புகளை சோதனை செய்ததில் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்துள்ளது.

 

அவர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்ததை கேரள மாநில சுகாதாரத்துறையும் உறுதிபடுத்தியுள்ளது. இதுபோலவே ஆலப்புழா மாவட்டம் சிங்கோலியைச் சேர்ந்த சியாம்குமார் (வயது 33) என்பவர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அவரும் கடும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

 

கடும் வெள்ளத்தால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள் தற்போது பரவிவரும் தொற்றுநோய் அபாயம் கேரள மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

BY JENO | SEP 1, 2018 11:08 AM #KERALAFLOOD #KERALA #RAT FEVER #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS