கேரள வெள்ளத்தின் போது முப்படையினர்,தேசிய பேரிடர் மீட்டு குழுவினர் மற்றும் காவல் துறையினர் என அரசுத்துறையை சேர்ந்த பலரும், மீட்பு பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டனர்.இவர்களுக்கு பக்கபலமாக இருந்து பல மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டதில், கேரள மீனவர்களின் பங்கு மிகப்பெரியதாகும்.கடும் வெள்ளத்தின் போது மீனவர்கள் தக்க சமயத்தில் தங்களின் படகுகளை கொண்டுவந்து உதவியதால் பல மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
மீட்புப்பணிகளில் ஈடுபட்ட மீனவர்களை கேரளத்து ராணுவம் என பெருமைப்படுத்தினார் கேரள முதல்வர்.அவர்களுக்கு கேரள அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதைக்கூட வேண்டாம் என மறுத்துவிட்டார்கள்.இந்நிலையில் வெள்ளத்தின்போது நடந்த மீட்புப்பணியில் முதுகை படிக்கட்டாக்கி,பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவர் ஜெய்ஷாலுக்கு மஹேந்திரா நிறுவனம் காரை பரிசாக அளித்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது, மீனவர் ஜெய்சாலுக்கு சன்னி யுவஜன சங்கம் என்ற இஸ்லாமிய அமைப்பு புதிய வீடு ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஷால், "தன்னுடைய வாழ்வில் ஒரு சொந்த வீடு கிடைக்கும் என தான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை,"என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.மலையாளத் திரைப்பட இயக்குனர் வினயன் மீனவர் ஜெய்ஷாலுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து, அவரை முதல்முறையாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- நிதி அளித்த திமுக தலைவருக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பதில்!
- 'தனது அடையாளத்தை மறைத்து'...கூலியாக வேலைசெய்த கலெக்டர்!
- This Man Worked Tirelessly As A Relief Worker In Kerala & Nobody Noticed He Was An IAS Officer
- Patient on way to hospital in ambulance dies after oxygen cylinder bursts
- Inspiring: Cancer-stricken beggar donates Rs 5,000 to Kerala flood
- கடவுளின் தேசத்தை தொடர்ந்து துரத்தும் சோகம்...இதுவரை 15 பேர் பலி!
- Navy Officer Arrested Over Charges Of Raping Kerala Woman
- கேரள வெள்ளம்...தர்மம் செய்த பிச்சைக்காரர் !
- Beggar Donates His Alms To Help Flood-Affected Kerala; Read His Inspiring Story Here
- டீ விற்று கேரளாவிற்கு நிதிதிரட்டிய பள்ளி மாணவர்கள் !