'நான் எந்த சாதி என்று'.. கடும் பதிலடி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்!

Home > தமிழ் news
By |

நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என பிக்பாஸ் வின்னர் ரித்விகா தெரிவித்திருக்கிறார்.

 

பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து,கபாலி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான ரித்விகா, பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். இதனால் அவருக்கு பேரும்,புகழும் கிடைத்தாலும் அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்ற தேடுதல்களும் அதிகரித்தன.

 

இந்த நிலையில் சாதி குறித்து தேடுபவர்களுக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர்,''ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..,'' என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

 

BIGGBOSS2TAMIL, RIYTHVIKA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS