பிக்பாஸ் வீட்டில் தற்போது பைனல் செல்வதற்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ரித்விகாவை அழைத்த பிக்பாஸ் எலக்ட்ரிக் கிரீன் கலரில் தலைமுடியை கலரிங் செய்து கொள்ள மும்தாஜை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற டாஸ்க்கை அளித்தார்.

 

ஆனால் மும்தாஜ் அதற்கு மறுத்து விட்டார்.இதனால் ரித்விகா தற்போது நேரடியாக பிக்பாஸால் நாமினேட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் மும்தாஜிற்கு ஆதரவாகவும்,எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

இந்தநிலையில் நடிகையும்,முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில்,''எல்லாரும் தியாகத்தலைவிகள் "😊💪#Mumtaz  மட்டும்"புரட்சித் தலைவி,'' என தெரிவித்துள்ளார்.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS