'முதல்முறையாக' மகளின் புகைப்படம்-பெயரை வெளிப்படையாகப் பகிர்ந்த நடிகை!

Home > தமிழ் news
By |

தங்களது செல்ல மகளின் புகைப்படம் மற்றும் பெயரினை முதல்முறையாக, நடிகை அசின் மற்றும் அவரது கணவர் ராகுல் சர்மா இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அசின் பாலிவுட் சென்று படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தொழிலதிபர் ராகுல் சர்மாவை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. மகளின் பாதத்தை மட்டும் புகைப்படமாக எடுத்து அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். தொடர்ந்து மகளின் புகைப்படம், பெயர் என எதையுமே அவர் வெளியிடவில்லை.

 

இந்தநிலையில் நேற்று மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய அசின்-ராகுல் சர்மா தம்பதி தங்களின் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

 

 

தங்களது முதல் எழுத்துக்களை ஒன்றாக்கி தங்களது இளவரசிக்கு ஏரின் என பெயர் சூட்டியுள்ளனர். ஏரின் குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' ஒரு வருடத்திற்கு முன்னால் குட்டி இளவரசியை இந்த உலகத்திற்கு வரவேற்றோம்.காலம் ஏன் இவ்வளவு வேகமாகப் பறக்கிறது? எனது மகள் ஏரினுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஏன் இத்தனை சீக்கிரம் நீ வளர வேண்டும்,'' என்று கூறி ஏரினின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏரின்...

BIRTHDAY, INSTAGRAM, TWITTER, ASIN, RAHULSHARMA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS