BGM BNS Banner

'சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்ட ரசிகர்'.. வைரல் மீம்க்கு நடிகர் பிரசன்னாவின் பதில் இதுதான்!

Home > தமிழ் news
By |
'சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்ட ரசிகர்'.. வைரல் மீம்க்கு நடிகர் பிரசன்னாவின் பதில் இதுதான்!

நடிகர் பிரசன்னா தற்போது சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவரையும், நடிகர் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டு வெளியான மீம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்தநிலையில் இந்த மீம் தொடர்பான ரசிகரின் பதிவொன்றுக்கு பிரசன்னா தற்போது பதில் அளித்திருக்கிறார்.

 

அதில் அவர் கூறியதாவது,'' நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பது எனது முழுநேர வேலை கிடையாது. நான் ஒரு சாதாரண நடிகர். எனது திறமையை வளர்த்துக் கொள்வேன் என நம்பிக்கை உள்ளது. சினிமாவில் வெற்றி பெறுவதற்கு நேரம் தேவைப்படும். ஒவ்வொருவருக்கும் இந்த கால அளவு மாறுபடும். அன்பையோ, நட்பையோ சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் உங்கள் அன்பையும் நான் பெறுவேன்,'' என தெரிவித்துள்ளார்.

TWITTER, SIVAKARTHIKEYAN, PRASANNA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS