‘MP யாரு MLA யாருன்னு தெரியாத அளவுக்கு வெச்சிருக்காங்க’.. பிரகாஷ்ராஜ் பிரத்யேக பேட்டி!

Home > தமிழ் news
By |

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூரில் சுயேட்சை வேட்பாளராக நிற்கவிருக்கிறார். அதற்கென பெங்களூர் மக்களை நேரில் சந்தித்து அரசியல் ரீதியான தனது ஆய்வை, பிரச்சாரத்தின் தொடக்கமாக செய்து வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது அரசியல் பயணம் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னதாக பலதரப்பட்ட பாமர மக்களை நேரடியாக சந்தித்து பேசியது குறித்து பகிர்ந்தபோது, மக்களின் சந்திப்பு மற்றும் அவர்களின் வரவேற்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததாகவும், அந்த சந்திப்புகளில் மக்களின் அறியாமை கண்டு வியந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிட்டியில் இருப்பவர்கள், எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம். ஆனால் பிரச்சாரத்திற்காகச் சென்றபோதுதான் ஒரு பெரிய உண்மை தன் முகத்தில் அடித்தாற்போல் தெரியவருகிறது என்று அதிரவைத்தார். 

அதன்படி, மக்களில் பலருக்கும் எம்.பி என்றால் யார்., எம்.எல்.ஏ என்றால் யார் மற்றும்  கார்ப்பரேட் என்றால் யார்? யாருடைய பொறுப்பு என்ன? யாருடைய பணிகள் என்ன? என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்று பிரகாஷ்ராஜ் பரிதாபப்பட்டார். மேலும் அவர்களுக்கு தங்கள் தொகுதியின் எம்.பி-யும், எதிர்க்கட்சிக் காரர்களும் கூட யார் யாரென்று தெரியவில்லை. அவர்களை அப்படித்தான் பலர் தங்களது சிஸ்டத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.

சுதந்திரம் கிடைத்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் பிரச்சனை உள்ளது. மக்களின் மனதில் என்ன இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள சென்றபோது, மிகவும் அத்தியாவசியமான தண்ணீரைக் கூட இன்னும் 2 லிட்டர் பாட்டில்களை கழுவி வைத்துக்கொண்டு பிச்சைக்காரர் போல அலையவேண்டிய சூழலில் உள்ளனர் என்று பிரகாஷ்ராஜ் வேதனைப்பட்டார்.

‘நான் எம்.பி., எம்.எல்.ஏ ஆகிய பதவிகளில் எந்த பதவிக்கு போட்டியிடுகிறேன் என்பதைவிட, மக்களுக்கானவற்றை தைரியமாக தூக்கிநிறுத்தி பேச யாரும் இல்லாத சூழல் அவர்களிடையே உள்ளது. இன்று இந்தியாவில் இருக்கும் எந்த மெஜாரிட்டி கட்சிகளும் தாங்கள் வாழத்தான் நினைக்கின்றன. ஆனால் மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர சுயேட்சையாகத்தான் போக வேண்டியிருக்கிறது’ என்று விளக்கமளித்தார்.

மேலும், ‘விவசாயிகளுக்கு வேறு வழியில்லை எனும் பட்சத்தில் கடன் வழங்கி அதையும் வாக்கரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். வருடாவருடம் கடனையே வழங்கிக் கொண்டிருப்பார்களா? எப்போதுதான் கடன் வாங்காத அளவுக்கு அவர்களின் பிரச்சனையை தீர்ப்பார்கள்’ என்று குரலெழுப்பியுள்ளார்.

PRAKASHRAJ, INTERVIEW, POLITICS, BENGALURU, LOKSABHAELECTIONS2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS