மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு.. வாழ்த்தியது யார் தெரியுமா?

Home > தமிழ் news
By |

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 28-ம் தேதி வெளியான படம் பரியேறும் பெருமாள். கதிர்,கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார்.

 

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தைத் தொடர்ந்து, காட்சிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் உலகநாயகன் என புகழப்படும் நடிகர் கமல்ஹாசன், பரியேறும் பெருமாள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட  பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும்  தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்  என் பாராட்டுக்கள். Carry on the good work @beemji,'' என பாராட்டியுள்ளார்.

 

எங்கும் புகழ் துவங்கட்டும்...

 

KAMALHAASAN, PARIYERUMPERUMAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS