கடந்த வாரம், 'மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 

எட்டு வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலானவற்றில் மத்திய, மாநில அரசுகளின்  போக்கை கண்டித்து போராட்டங்கள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மேலும் பழைய வழக்குகள் தூர்வாரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கடந்த போராட்ட கூட்டம் ஒன்றில் பாலஸ்தீனம் போல இங்கும் போராட்டம் நடைபெறும் என்று திருமுருகன் காந்தி பேசியது உட்பட பலவற்றுக்கும் சேர்த்து அவர் மீது பாய்ந்திருப்பதோ ‘ஊபா (UAPA)’ எனப்படும் ’சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு (Unlawful Activities Prevention Act)’.

 

தடா, பொடா, குண்டர் சட்டங்களுக்கு நிகரான இந்த சட்டம் ஒருவரை எவ்வித விசாரணையும் இன்றி, 6 மாதம் சிறையிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 வருடம் தண்டனையும் அளிக்க வல்லது.

 

கையில் ஆயுதம் வைத்திருப்பவருக்கு எதிராக போடப்படவேண்டிய இந்த சட்டம் கருத்துரிமை பேசும் திருமுருகன் காந்தி மீது பாய்ந்துள்ளது என்று இயக்குனர் வ.கவுதமன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

BY SIVA SANKAR | AUG 25, 2018 10:17 AM #UAPA #THIRUMURUGANGANDHI #MAY17MOVEMENT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS