ரஷ்யாவில் மீம்ஸ்களை சேர்த்து வைப்பவர்கள் கண்காணிக்க வேண்டியவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.  பொதுவாக நம்மூர் மீம்ஸ்களில் அரசியல்வாதிகளை வறுத்தெடுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களே அதிகம். ஆனால் மீம்ஸ் கலாச்சாரம் என்பது அரசியல் நாகரிகம், தனிமனித தாக்குதல், சட்ட வரையறைகள், கருத்துச் சுதந்திரத்துக்கான எல்லைகள் முதலிய பலவற்றைத் தாண்டி சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

எனினும் மத ரீதியலான மீம்ஸ்கள் நாட்டுக்கும், அரசுக்கும் ஊறுவிளைவிப்பதால் ரஷ்யாவில் சமீபத்திய கேம் ஆஃப் த்ரோன்ஸ், புகைப்பிடிப்பது போன்ற செவிலியர்கள் (நன்)  போன்று, பட-சீரிஸ்களை அடிப்படையாக வைத்து உருவான மீம்ஸ்கள் மதங்களை விமர்சிப்பதால், அவற்றை பலரும் தங்கள் வலைதள கணக்குகளில் பதிவிறக்கம் செய்தோ அல்லது சேமித்தோ வைத்துள்ளது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

அதுமட்டுமல்லாமல், இதுபோன்று மீம்ஸ்களை சேமித்து வைப்பவர்களது நேரடி வங்கிக் கணக்குகளுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து இந்த மீம்ஸ்களை சேர்த்து வைக்கும் தனிமனிதர்கள் பலரும் கண்காணிக்கப்படவுள்ளனர்.

BY SIVA SANKAR | SEP 20, 2018 1:47 PM #MEMES #RUSSIA #MEMECULTURE #GAMEOFTHRONE #THENUN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS