சென்ற வாரம் நெல்லையில் அல்வின் என்னும் 12-ம் வகுப்பு மாணவர் நெல்லையில், 1000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் முழுதும் நிரம்பி வழிந்தது. அதன் பின்னர் பைக்கை ஸ்டார்ட் செய்ததும், இக்னைட்டரில் இருந்து உருவான தீப்பொறி சிந்திய பெட்ரோல் மீது பாய்ந்ததோடு, அல்வினின் மீதும் பரவியதால் பதற்றமாகி அவர் வண்டியைப் போட்டுவிட்டு இறங்கினார்.

 

வாகன ஓட்டிகளையும் பெட்ரோல் பம்ப் ஊழியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்வின் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

தேவைக்கேற்ப ஓவர்ஃப்ளோ ஆகும் அளவுக்கு அதிகமாக பெட்ரோல் நிரப்புவதை தவிர்த்தல், பெட்ரோல் நிரப்பும் குழாயினை டேங்கில் வைத்துவிட்டு பெட்ரோல் பம்ப்பினை பெட்ரோலில் மூழ்காமல் பார்த்துக்கொள்வது,  பெட்ரோல் பங்கிலேயே நின்றபடி கிக் ஸ்டார்ட் செய்வது, செல்போன் பேசுவது குறிப்பாக, பெட்ரோல் டேங்கின் மீது தீயில் இருந்து பாதுகாக்கும் உறை போடாமல் இருப்பது உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தை பலரும் தற்போது உணர்ந்துவருகின்றனர்.

BY SIVA SANKAR | SEP 19, 2018 5:18 PM #NELLAI #PETROLPUMP #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS