கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை பெற்ற தாயே,கொலை செய்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இது தொடர்பாக அபிராமி-சுந்தர் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசார் நேற்று அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அபிராமியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

 

இந்தநிலையில் அபிராமிக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என அவரது அக்கம்-பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அபிராமி குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில், '' எங்களது சொந்த பிள்ளைகள் போல பார்த்துக் கொண்டோம்.அவர்களின் மரணத்தை எங்களால் மறக்க முடியவில்லை.அபிராமிக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்,''என்றார்.

 

இதேபோல அவர்கள் வீட்டின் அருகில் குடியிருந்த மற்றவர்களும் எங்களிடம் அந்த குழந்தைகளை விட்டு சென்றிருக்கலாம்.குழந்தைகளை கொல்ல அவளுக்கு எப்படி மனது வந்தது என்று தெரியவில்லை.விஜய் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருப்பார்.அபிராமிக்கு கண்டிப்பாக தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

BY MANJULA | SEP 4, 2018 12:54 PM #MURDER #ABIRAMI #KUNDRATHUR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS