வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை, வீட்டுக்கு அழைத்துச்சென்று இளைஞர்கள் கொடூரம்!

Home > தமிழ் news
By |

காலமாகவே, போக்குவரத்துக் காவல்துறையினருடன் பொதுமக்கள் பலரும் விரோதப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் குடித்துவிட்டு வாகன ஓட்டியவரை ஏன் என்று கேட்ட லக்னோ போக்குவரத்துக் காவலரை, அந்த   வாகன ஓட்டி அங்கேயே வைத்து ரத்தம் வரும் அளவுக்கு சரமாரியாக தாக்கி கட்டிப் புரண்ட சம்பவம் பலர்டையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதேபோல்,  உத்திரப் பிரதேச மாநிலத்துக்குட்பட்ட டியோடியா நகரத்தில் காவலர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் மேலும்  அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது. 

 

வண்டியில் ரிஜிஸ்ட்ரேஷன் பேப்பர் உள்ளிட்ட இதர விபரங்களைக் கேட்ட காவலரிடம், ‘எல்லாம் இருக்கிறது’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், சில நொடிகளில், காவலரிடம் அனைத்தையும் காண்பிப்பதாகக் கூறி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, வீட்டுக்கு வெளியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, வாகன எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  அங்கு கூடியிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் பரவி வருகிறது.

TRAFFICCOP, TRAFFIC, UTTERPRADESH, INDIA, DEORIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS