#MeTooவுக்கு எதிராக உருவான #HimToo.. முற்றுப்புள்ளி வைத்த இளைஞர்!

Home > தமிழ் news
By |

#MeTooவுக்கு எதிராக தனது தாய் உருவாக்கிய #HimToo என்னும் ஹேஷ்டேக்கிற்கு இளைஞர் ஒருவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவரது பதிவு இணையத்தில் பலரின் இதயங்களையும் வென்றுள்ளது.

 

கடந்த ஆண்டு ட்விட்டரில் #MeToo என்னும் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகியது. காரணம் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபலங்களும்  தங்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இதில் பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டேக் மிகவும் பிரபலமடைந்தது.

 

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், ஆண்கள் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து, பெண்ணியம் பேசும் பெண்களுக்கு எதிராக, தன் மகனின் புகைப்படத்துடன் #HimToo என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார். 

 

அத்துடன் தனது மகன் பீட்டர் ஹென்சனின் படமொன்றை பதிவிட்டு,'' இவர்தான் என் மகன். பெண்களை மதிக்கும் ஜென்டில்மேன். இவன் இதுவரை பெண்களுடன் தனியாக டேட்டிங் சென்றதில்லை.#HimToo வுக்கு நான் வாக்களிக்கிறேன்,'' என தெரிவித்திருந்தார்.இது இணையவாசிகள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

 

இதைத்தொடர்ந்து அவரது மகன்,'' இது எனது அம்மாவின் ட்வீட். நான் பெண்களை மதிப்பவன். சில செயல்கள் நம்மை காயப்படுத்தும் என்று நாம் விரும்பும் மனிதர்கள் நம்மை அறியாமலேயே செய்வார்கள்.#HimTooவை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்.கப்பற்படையில் நான் கால்நடை மருத்துவர். உங்களின் மீம் விளையாட்டுக்கு இது முற்றுப்புள்ளி,'' என தனியாக @thatwasmymom என்ற பேஜைத் தொடங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TWITTER, AMERICA, #HIMTOO, #METOO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS