102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ!
Home > தமிழ் news102 வயதான மூதாட்டி வானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாகசக்கார பாட்டியாக மாறி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவில் ஐரியன் ஓ ஷியா என்கிற இந்த பாட்டியம்மா செய்த இந்த சாகசம், சாதாரணமாக தரையில் நிகழவில்லை. ஏறக்குறைய 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து மூதாட்டி இந்த சாதனையை செய்துள்ளார்.
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு, அதாவது பாட்டியம்மாவின் 100வது வயதில் தன் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக, 220 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து குதித்து சாதனை செய்தபோது, வெகு சாதாரணமாக, அதைச் செய்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது, 102 வயதில் பாட்டிம்மா செய்துள்ள சாகசம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த முறை வானத்தை வெகு அருகில் பார்த்த மூதாட்டி, ‘வானம் மிகவும் தெளிவாகவும் அதே சமயம் குளிராகவும் இருந்ததாகக் கூறி நெகிழந்துள்ளார்.’
முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த தனது மகளால் துயரம் கொண்ட மூதாட்டி, மகளைப் போலவே புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ரிஸ்க்கினை இந்த வயதிலும் எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- WATCH | This 102-Year-Old Great-Granny Has Become The World's "Oldest" Skydiver
- 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாறு காணாத வெற்றி!
- சட்டெனப் பறந்து 'கோலி'யைக் காலி செய்த கவாஜா... ஷாக் 'வீடியோ' உள்ளே!
- 'மரண அடி'னா இதுதானா?.. அசால்ட்டாக '200' ரன்களைக் குவித்த இளம் வீரர்!
- 'ஏன் இப்படி புதுசு புதுசா அவுட் ஆகுற'...பயிற்சியாளரை கடுப்பேற்றிய பிரபல வீரர்!
- ‘இவர இப்படி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு’.. உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!
- பயிற்சியின்போது பலத்த காயம்; டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா பிரபல கிரிக்கெட் வீரர்?
- அடப்பாவமே! ஃபிளைட் ஓட்டும்போது பைலட் தூங்குறது நியாயமாரே?
- Plane Flies 50 Km Past Destination As Pilot Falls Asleep
- உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவாரம் சிறுநீர் பருகிய பெண்!