உலகையே உலுக்கிய தீவிரவாத தாக்குதலில் மிக முக்கியமான ஒன்று 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி  நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல்.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர்.

 

இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்த போது அதன் அருகே இருந்த நியூயார்க் சுரங்க ரெயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்தது.அதன் அருகே இருந்த பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.பல ஆண்டுகளாக நியூயார்க் சுரங்க ரெயில் நிலையம் சீரமைக்கப்படாமல் இருந்தது.மிகவும் பிஸியான நியூயார்க் நகரில் மிகமுக்கியமான இடத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் பல மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வந்த ஒன்றாகும்.

 

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ரெயில் நிலையம் சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிடன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த ரெயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.இதை நியூயார்க் நகர மக்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.இந்த நிகழ்வு தங்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என உணர்வு பூர்வமாக தெரிவித்தார்கள்.

BY JENO | SEP 10, 2018 4:13 PM #ATTACKED #NEW YORK CITY SUBWAY STATION #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS